தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை; அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை! - ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை குறித்து, தேசிய, மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை செய்தார்.

சத்ய பிரத சாஹூ
தலைமைத் தேர்தல் அதிகாரி

By

Published : Oct 29, 2021, 1:49 PM IST

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை குறித்து, அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்ய பிரத சாஹூ இன்று அக்.29 ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார்.
இந்தியத் தேர்தல் ஆணையம் 01.01.2022-ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு சிறப்புச் சுருக்க முறை திருத்தம், 2022-ஐ அறிவித்துள்ளது. இது தொடர்பாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹூ, அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை 29.10.2021 அன்று நடத்துகிறார்.

இந்தக் கூட்டத்தில், அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் போது படிவங்களின் தீர்வு மேற்கொள்ளுதல் மற்றும் அதன் அட்டவணை குறித்துத் தெரிவிக்கப்பட உள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையம் சிறப்புச் சுருக்க முறை திருத்தம், 2022 கான கீழ்க்கண்டக் கால அட்டவணையை அறிவித்துள்ளது.

ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் - 01.11.2021 (திங்கள்கிழமை)

கோரிக்கை மற்றும் மறுப்புரைகள் விண்ணப்பிக்கும் காலம் - 01.11.2021 முதல் 30.11.2021 வரை

சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாள்கள் - 13.11.2021 ( சனிக்கிழமை), 14.11.2021(ஞாயிற்றுக்கிழமை), 27.11.2021 (சனிக்கிழமை), 28.11.2021 (ஞாயிற்றுக்கிழமை).

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் - 05.01.2022 (புதன் கிழமை)

தேசிய வாக்காளர் தினம் - 25.01.2022 (செவ்வாய்க் கிழமை)

வாக்குச் சாவடி முகவர் நியமனம்

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும், வாக்குச் சாவடி நிலை முகவர்களை நியமிக்கலாம். அம்முகவர்கள், சிறப்புச் சுருக்க முறை திருத்தம் 2022 மற்றும் சிறப்பு முகாம் நாள்களில் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்குத் திருத்தங்கள் மற்றும் பிறவற்றை அடையாளம் காண உதவி செய்யலாம்.

வாக்குச் சாவடி நிலை முகவர்கள், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள இறந்த மற்றும் இடம் பெயர்ந்த வாக்காளர்கள் பற்றி வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நிர்ணயிக்கப்பட்ட படிவங்களில் தகவல் வழங்கலாம்.

சிறப்புச் சுருக்க முறை திருத்தம், 2022இன் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் அட்டவணை தொடர்பான விளக்கக் காட்சிகள், அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு, கூட்டத்தின் போது காண்பிக்கப்படும். மேலும், இக்கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகளின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் பரிசீலிக்கப்படும்.

இதையும் படிங்க: 2ஜி விவகாரம்: நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட முன்னாள் சிஏஜி வினோத் ராய்!

ABOUT THE AUTHOR

...view details