தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாற்றுத் திறனாளி வீராங்கனைகளிடம் பாரபட்சம் கூடாது - உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

மாற்றுத் திறனாளி வீராங்கனைகளை பாரபட்சமாக நடத்துவதை தடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Dec 20, 2021, 8:27 PM IST

Updated : Dec 20, 2021, 9:14 PM IST

போலந்து நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த செவித்திறன் குறைப்பாடுயோருக்கான சர்வதேச தடகளப் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்க மறுக்கப்பட்டதை எதிர்த்து கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சமீஹா பர்வீன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

டெல்லியில் நடந்த தகுதிப் போட்டிகளில் இந்திய அளவில் கலந்து கொண்ட 12 பேரில், தகுதி பெற்றும், பெண் என்பதால் தன்னை போலந்து நாட்டிற்கு அழைத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக மனுவில் குற்றம் சாட்சியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன் பிறப்பித்த இடைக்கால உத்தரவின் அடிப்படையில், போலாந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்ட சமீஹா பர்வீன், 2022இல் நடக்க உள்ள உலக காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டிகளிலும், 2023இல் நடக்க உள்ள பாராலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்க தகுதி பெற்றார்.

இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பளித்த நீதிபதி மகாதேவன், மாற்றுத் திறனாளி வீராங்கனைகள், அனைத்து மட்டத்திலான போட்டிகளில் பங்கேற்கச் செய்ய மத்திய, மாநில அரசு அதிகாரிகள் தவறி விட்டதாக வேதனை தெரிவித்தார்.

மேலும், எந்த காரணத்தைக் கொண்டும் மாற்றுத் திறனாளி வீராங்கனைகளை பாரபட்சமாக நடத்துவதை தடுக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு போதுமான நிதியுதவிகளை வழங்க வேண்டும் எனவும், முறையான தேர்வு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும், தேவையான பயிற்சிகள் மற்றும் இலவச மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பயணங்களின் போது மாற்றுத் திறனாளி வீராங்கனைகளுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், சர்வதேச போட்டிகளில் பங்கேற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் விருதுகளை வழங்கவேண்டும் எனவும், வீராங்கனைகளை, விளையாட்டு வீரர்களுக்கு சமமாக நடத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்துள்ளார்.

இதையும் படிங்க:காவலர்களால் தாக்கப்பட்ட வழக்கறிஞருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு...!

Last Updated : Dec 20, 2021, 9:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details