தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இழப்பீடு வழங்குவதில் தமிழர்களுக்கு பாகுபாடு - பழ. நெடுமாறன் - மூணாறு

சென்னை: கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு வழங்கியதுபோல் மூணாறு நிலச்சரிவில் சிக்கி இறந்தோர் குடும்பங்களுக்கும் பாகுபாடின்றி இழப்பீடு வழங்க தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் கேட்டுக்கொண்டுள்ளார்.

tamils
tamils

By

Published : Aug 10, 2020, 5:47 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மூணாறு அருகே தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு 43 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 28 தமிழர்களின் நிலை என்னாயிற்று எனத் தெரியவில்லை. துயரம் மிகுந்த இந்த நிகழ்வு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள இறந்தவர்களின் உறவினர்கள் பலர், அங்கு செல்வதற்கும், இறந்த உடல்களைப் பெற்று சொந்த ஊர் திரும்புவதற்குமான உதவிகளை உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டும்.

இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் 10 லட்சம் அளிப்பதாக கேரள முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 20 லட்சம் அளிக்கப்படுமென அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். ஆனால், மூணாறில் உயிரிழந்தவர்கள் தமிழர்கள் என்பதால், இத்தகைய பாகுபாடு காட்டப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இறந்த தமிழர்களின் குடும்பங்களுக்கும் ரூபாய் 20 லட்சம் வழங்குமாறு கேரள முதலமைச்சரை வேண்டிக்கொள்கிறேன் ” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மழையால் பாதிக்கப்பட்டோர் 20 நிவாரண முகாம்களில் தங்கவைப்பு - அமைச்சர் உதயகுமார்

ABOUT THE AUTHOR

...view details