தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உதயநிதி இனிமேல் 'மக்கள் அன்பன்' - சீனு ராமசாமி

இயக்குநர் சீனு ராமசாமி நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு 'மக்கள் அன்பன்' என்ற பட்டத்தை சூட்டியுள்ளார்.

'மக்கள் அன்பன்'
'மக்கள் அன்பன்'

By

Published : Aug 17, 2021, 5:39 PM IST

Updated : Aug 17, 2021, 7:31 PM IST

தமிழ் சினிமாவில் கதாநாயகர்களுக்கென தனிப்பட்டங்கள் உண்டு. அந்தப் பெயரை ரசிகர்கள், இயக்குநர்கள் வைப்பார்கள்.

உதாரணமாக நடிகர்கள் ரஜினி (சூப்பர் ஸ்டார்), கமல்ஹாசன் (உலக நாயகன்), அஜித் (அல்டிமேட் ஸ்டார்), விஜய் (தளபதி) போன்ற நடிகர்களுக்கென்று தனிப்பட்டங்கள் உண்டு.

'மக்கள் அன்பன்'

அண்மையில் நடிகர் விஜய் சேதுபதிக்கு இயக்குநர் சீனு ராமசாமி 'மக்கள் செல்வன்' என்ற பட்டத்தைக் கொடுத்தார். அந்தப்பெயர் ரசிகர்கள் மத்தியில் நிலைத்திருக்கிறது.

தற்போது, மீண்டும் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு 'மக்கள் அன்பன்' என்ற பட்டத்தை இயக்குநர் சீனு ராமசாமி அளித்துள்ளார்.

'மக்கள் அன்பன்' உதயநிதி

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக வந்து, பின்னர் ஹீரோவாக மாறியவர், உதயநிதி ஸ்டாலின். அதனைத்தொடர்ந்து திருவேல்லிக்கேணி - சேப்பாக்கம் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று, தற்போது சட்டப்பேரவை உறுப்பினர் ஆக உள்ளார்.

'இடி முழக்கம்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

மேலும், படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இயக்குநர் சீனு ராமசாமி தற்போது, ஜீ.வி. பிரகாஷ் நடித்துவரும் படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின், சீனு ராமசாமி இயக்கும் 'இடி முழக்கம்' படத்தின் போஸ்டரை சமீபத்தில் தனது ட்விட்டரில் வெளியிட்டார்.

'இடி முழக்கம்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

இப்படத்தில் நடிகர்கள் ஜீ.வி. பிரகாஷ் குமார், காயத்ரி ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று சீனு ராமசாமி அறிவித்தார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை 'மக்கள் அன்பன்' உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவார் என சீனு ராமசாமி தெரிவித்துள்ளதையடுத்து, உதயநிதிக்கு 'மக்கள் அன்பன்' என்ற பட்டம் சூட்டப்பட்டிருப்பது அனைவருக்கும் தெரியவந்தது.

இதையடுத்து இனிவரும் உதயநிதியின் அனைத்துப் படங்களிலும் 'மக்கள் அன்பன்' உதயநிதி என்ற பெயர் இருக்கும் என நம்பலாம்.

இதையும் படிங்க: 'வருமான வரிக்கு வட்டி செலுத்த விலக்குகோரிய விவகாரம்: நடிகர் சூர்யா வழக்கு தள்ளுபடி!'

Last Updated : Aug 17, 2021, 7:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details