தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'நீங்கள் ஆண்டதால்தான் நாங்கள் தெருவில் நிற்கிறோம்'- ராதாரவிக்கு கௌதமன் பதிலடி! - gowthaman byte in Chennai Airport

சென்னை: கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு ஏற்படும் அவலத்தை பற்றி விமானநிலையத்தில் இயக்குநர் கெளதமன் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

இயக்குநர் கெளதமன் பேட்டி

By

Published : Sep 23, 2019, 5:19 PM IST

சென்னை விமானநிலையத்தில் இயக்குனர் கௌதமன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தமிழர்களுக்கு தொடர்ச்சியாக கர்நாடக மாநிலத்தில் தொடர் அவல நிலை ஏற்பட்டு வருகிறது.

ஒன்றரை கோடி தமிழ் மக்கள் கர்நாடக மாநிலத்தில் வாழ்ந்து வருகின்றனர், குறிப்பாக பெங்களூருவில் ஒரு கோடி தமிழ் மக்கள் வாழ்கின்றனர். அங்கே தமிழர்கள் தமிழில் பேசமுடியவில்லை, மீறி பேசினால் தண்டிக்கப்படுகின்றனர். இந்திய இறையாண்மையில் கர்நாடகாவிற்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா? இங்கேயுள்ள தமிழ்நாடு அரசு ஏன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது? அங்குள்ள தமிழர்களுக்கு ஏன் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், தெலுங்கர்கள் இல்லாமல் தமிழர்கள் வளரமுடியாது என சமீபத்தில் ராதாரவி பேசியது குறித்து கௌதமன், நீங்கள் எல்லாம் ஆண்டதால்தான் நாங்கள் தற்போது தெருவில் நிற்கிறோம் நாங்கள் விழுந்து கிடக்கும்போது நிமிர்வதற்கு யார் கை கொடுத்தீர்கள் என்றார்.

இயக்குநர் கெளதமன் பேட்டி

ABOUT THE AUTHOR

...view details