சென்னை: சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூரில் செயல்பட்டு வரும் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் மாணவர் சேர்க்கை, உதவி பேராசிரியர் நியமனம் போன்றவற்றில் தற்போதைய கல்லூரி செயலாளர் ரமாதேவி, முறைகேடாக சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமாக ஊழல் செய்திருப்பதாக இயக்குநர் கெளதமன் குற்றம்சாட்டியுள்ளார்.
சங்கரன்கோவில் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் முறைகேடு - இயக்குநர் கெளதமன் புகார்! - மாணவர் சேர்க்கையில் முறைகேடு
சங்கரன்கோவில் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் முறைகேடு நடப்பதாக இயக்குநர் கெளதமன் புகார் அளித்துள்ளார்.
இயக்குநர் கெளதமன்
இது தொடர்பாக தலைமை செயலகத்தில் உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் கோரிக்கை மனு அளித்துள்ள கெளதமன், அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு கல்லூரியை கைப்பற்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அரசு நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில், வரும் டிசம்பர் மாதம் 9ஆம் தேதி கல்லூரி மீட்பு போரட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஒழுகுவது மழைநீரா? அரசின் ஊழலா? - கமல்ஹாசன் கேள்வி