தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 99 ஆவது பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் காலை 10 மணியளவில் நடைபெற்றது. இதில் இயக்குனர் பாரதிராஜா அடுத்த தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இயக்குநர் சங்கத்தின் தலைவரானார் பாரதிராஜா! - Director bharathiraja
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் இன்று சங்க தலைவராக இயக்குநர் பாரதிராஜா போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இயக்குநர் பாரதிராஜா
இது தவிர சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் சங்க நடவடிக்கைகளில் பங்கு பெறுவதில்லை. அவ்வாறு பங்கு பெறாமல் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது உள்பட ஐந்திற்கும் மேற்பட்ட தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன. இதில், இயக்குநர்கள் பேரரசு, மனோபாலா உள்ளிட்ட பிரபல இயக்குனர்கள் பலர் பங்கேற்றனர்.