தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அம்மாடியோ... யானைக்கு இத்தனை பெயர்களா...?

தமிழ் மண்ணில் யானையைப் போன்று கொண்டாடப்பட்ட வனஉயிர் வேறெதுவும் இருக்க முடியாது. உலக யானைகள் தினத்தில் (ஆகஸ்ட் 12) தமிழ்ச் சமூகத்தில் யானைகளுக்கு வழக்கத்தில் இருந்த பெயர்களில் சிலவற்றை தற்போது பார்க்கலாம்...

elephant

By

Published : Aug 12, 2019, 1:32 PM IST

Updated : Aug 12, 2019, 5:29 PM IST

ஆண் யானையின் பெயர்கள்

  • அஞ்சனாவதி
  • அரசுவா
  • அல்லியன்
  • அறுபடை
  • ஆம்பல்
  • ஆனை
  • இபம்
  • இரதி
  • இருள்
  • உவா
  • உம்பர்
  • உம்பல்
  • எறும்பி
  • ஒருத்தல்
  • ஓங்கல்
  • கடகம்
  • கரி
  • கரேணு
  • கயம்
  • கள்வன்
  • களபம்
  • களிறு
  • கறையடி
  • குஞ்சரம்
  • கும்பி
  • கைம்மா
  • கைம்மலை
  • கொம்பன்
  • சிந்துரம்
  • தந்தி
  • தந்தாவளம்
  • தும்பி
  • தும்பு
  • தூங்கல்
  • தோல்
  • நாக
  • நால்வாய்
  • புகர்முகம்
  • புழைக்கை/ பூட்கை
  • பெருமா
  • பொங்கடி
  • போதகம்
  • மதகயம்
  • மதாவளம்
  • மதோற்கடம்
  • மந்தமா
  • மருண்மா
  • மாதங்கம்
  • யூதநாதன்
  • வயமா
  • வல்விலங்கு
  • வழுவை
  • வாரணம்
  • வேழம்
    ஆண் யானை

பெண் யானையின் பெயர்கள்

  • அதவை
  • அத்தினி
  • கரிணி
  • பிடி
  • வடவை
    பெண் யானை

யானைக் குட்டியின் பெயர்கள்

  • கயந்தலை
  • கயமுனி
  • களபம்
  • துடியடி
  • போதகம்
    யானைக் குட்டிகள்

தகவல்: முனைவர். ஹேமமாலினி, மானுடவியல் ஆய்வாளர்

Last Updated : Aug 12, 2019, 5:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details