தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வன்கொடுமை வழக்கை ரத்து செய்யக்கோரி தயாநிதி மாறன், டி.ஆர். பாலு மனு! - டி.ஆர்.பாலு

சென்னை: தங்களுக்கு எதிரான வன்கொடுமை தடைச்சட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், டி.ஆர். பாலு ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

dhayanithi
dhayanithi

By

Published : May 23, 2020, 2:21 PM IST

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் திமுகவின் ’ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின்கீழ் மக்களிடம் பெறப்பட்ட மனுக்களை தலைமைச் செயலரை சந்தித்து வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், தலைமைச் செயலர் தங்களை மூன்றாம் தர மக்கள் போல் நடத்தினார் என்றும், தாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா? எனவும் கூறியிருந்தார்.

தயாநிதி மாறனின் இந்தப் பேச்சு பட்டியலின மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூக நீதிக்காகப் போராடும் ஒரு கட்சியின் முக்கியப் பிரமுகரிடமிருந்து இதுபோன்ற வார்த்தைகள் கேட்பது தங்களை வேதனையில் ஆழ்த்துகிறது என அம்மக்கள் வருத்தம் தெரிவித்தனர்.

இதையடுத்து, பட்டியலின மக்களை இழிவுபடுத்தி பேசியுள்ளதாகக் கூறி, கோவையைச் சேர்ந்த சேகர் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் கோவை வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் தயாநிதி மாறன், டி.ஆர். பாலு உள்ளிட்டோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும், வழக்கின் மேல் விசாரணைக்குத் தடைவிதிக்கக் கோரியும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், டி.ஆர். பாலு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், எவரையும் புண்படுத்தும் நோக்கில் அந்தக் கருத்தை தாங்கள் தெரிவிக்கவில்லை என இருவரும் கூறியுள்ளனர். இந்த மனுவை நீதிபதி நிர்மல்குமார் இன்று பிற்பகல், அவசர வழக்காக விசாரிக்கிறார்.

இதையும் படிங்க: 'குரோத எண்ணத்துடன் அதிமுக ஆர்.எஸ். பாரதியைக் கைது செய்துள்ளது' - ஸ்டாலின் காட்டம்

ABOUT THE AUTHOR

...view details