தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'கைது செய்யும்போது காவல் துறையினர் மேற்கொள்ளவேண்டியவை என்ன?' -  டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை - டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை

சென்னை: கரோனா பரவல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், காவல் துறையினர் குற்றவாளிகளைக் கைது செய்யும்போது என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த சுற்றறிக்கையை அனைத்து காவல் துறை அலுவலர்களுக்கும் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி அனுப்பி உள்ளார்.

டிஜிபி திரிபாதி
டிஜிபி திரிபாதி

By

Published : Jun 25, 2020, 4:15 PM IST

தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் திரிபாதி அனைத்து காவல் ஆணையர்களுக்கும் (சென்னை தவிர), அனைத்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்களுக்கும், மண்டல ஐஜிக்களுக்கும் விரிவான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதில், '50 வயதுக்கும் மேற்பட்ட காவலர்களைக் கைது செய்யும் பணிகளுக்கும்; பாதுகாப்பு பணிகளிலும் அமர்த்தக் கூடாது. குற்றவாளிகளை அழைத்துச் செல்ல காற்றோட்டமுள்ள பெரிய வாகனத்தைப் பயன்படுத்த வேண்டும். கைது தொடர்பான நடவடிக்கைகளின்போது முகக்கவசங்கள் அணிந்திருப்பதும், கிருமிநாசினிகளைப் பயன்படுத்தவும் வேண்டும்.

கைது செய்யப்படும் முன் குற்றஞ்சாட்டப்பட்டவரையும் முகக்கவசம் அணிவிக்கக் கோர வேண்டும். குற்றவாளிகளைத் தேவையான பட்சத்தில் மட்டுமே காவல் துறையினர் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கைது நடவடிக்கை குறித்து துணைப் பிரிவு அலுவலர் முடிவெடுக்க வேண்டும். குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், உடல் நல பிரச்னை உள்ள குற்றவாளிகளை கைது செய்வதையும் முடிந்தவரையில் நிறுத்த வேண்டும்.

மேலும் கைது நடவடிக்கைகளில் காவல் துறையினர் ஈடுபடும்போது குறைந்த எண்ணிக்கையிலான காவலர்கள் செல்ல வேண்டும்.

குறிப்பாக, கைது நடவடிக்கைகளில் காவலர்கள் ஈடுபடும் போது பிபிஇ கிட், முகக்கவசம், சானிடைசர் ஆகியவை பயன்படுத்த வேண்டும். கைது செய்யக்கூடிய குற்றவாளிகளுக்கும் முகக்கவசம் மற்றும் சானிடைசர் வழங்க வேண்டும்.

பின்னர் கைது செய்யப்பட்ட உடன் குற்றவாளியை தெர்மல் ஸ்கேனர் கருவியைக் கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும். அவர்களைக் கொண்டு செல்லும் வாகனங்களை கிருமி நாசினி மருந்துகளைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்' என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details