தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சித்த வைத்திய ஆரம்ப சுகாதர நிலையத்தில் அடிப்படை வசதிகள்: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு! - சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: சேலம் கண்ணன்குறிச்சியில் சித்த வைத்திய ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகளை உறுதிபடுத்தக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Development of siddha hospital, notice to state, MHC
Development of siddha hospital, notice to state, MHC

By

Published : Jan 19, 2021, 4:49 PM IST

சேலம் மாவட்டம் கண்ணன்குறிச்சியில் சித்த வைத்திய முறையில் சிகிச்சை அளிக்கும் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதில், போதிய அளவில் மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் நியமிக்கப்படாமலும், போதிய மருத்துவ உபகரணங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமலும் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

சாலையைவிட தாழ்வான பகுதியில் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளதால், அந்த வளாகத்தில் கழிவுநீர் தேங்கியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குறைபாடுகளை சரிசெய்து பொதுமக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் ஆரம்ப சுகாதாரத்தை புதுப்பித்து அமைக்க தமிழ்நாடு அரசிற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் உத்தரவிடக்கோரி எல். சோபியாமேரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு, பொது சுகாதாரத் துறை, மாவட்ட நிர்வாகம் ஆகியோர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க...தமிழ்நாடு அமைச்சர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை!

ABOUT THE AUTHOR

...view details