தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஸ்டெர்லைட் ஆலைக் கழிவுகளை அகற்றக்கோரிய வழக்கு - தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலையில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்ற உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசும், வேதாந்தா நிறுவனமும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Aug 17, 2021, 10:34 PM IST

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்திலுள்ள கழிவுகளை அகற்ற உத்தரவிடக்கோரி பேராசிரியர் பாத்திமா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கில் கூடுதல் மனுதாக்கல் செய்ய மனுதாரருக்கு அனுமதியளித்த நீதிபதிகள், மனுவிற்கு தமிழ்நாடு அரசும், வேதாந்தா நிறுவனமும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 5 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

இதற்கிடையில், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வழக்கு விசாரணை தள்ளி வைப்பு

அப்போது, வேதாந்தா நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கெனவே ஆலையை மூட வேண்டும் என்று கொள்கை முடிவு எடுத்து அரசு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும்,

இதை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இந்த வழக்கை தள்ளி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை ஆறு மாதங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

மேலும், உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவு பிறப்பித்தாலும், அதுசம்பந்தமாக முறையீடு செய்து, வழக்கை முன்கூட்டியே பட்டியலிட கோரிக்கை வைக்க வேதாந்தா நிறுவனத்திற்கு உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: ’எழுவர் விடுதலை குறித்து எங்களால் முடிவெடுக்க முடியாது’ - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

ABOUT THE AUTHOR

...view details