தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தாஜ்மஹாலாக இருந்தாலும் இடிக்கப்படும்: சென்னை உயர் நீதிமன்றம் - Chennai district news

நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்படுவது தாஜ்மஹாலாக இருந்தாலும், விருந்தினர் மாளிகையாக இருந்தாலும் இடிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு எச்சரித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Jun 30, 2021, 11:07 PM IST

Updated : Jul 1, 2021, 9:43 AM IST

நாகப்பட்டினத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து ரயில்வே நடைபாதை கட்டப்படுவதால் இந்த கட்டுமானத்துக்கு தடை விதிக்கக்கோரி எஸ்.டி. ஆறுமுகம் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நடைபாதை கட்டுமான பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வர தயார் நிலையில் இருப்பதால் தடை விதிக்கக் கூடாது என ரயில்வே தரப்பில் தெரிவிக்கபட்டது.

சென்னை உயர் நீதிமன்றம்
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்படுவது தாஜ்மஹாலாக இருந்தாலும், விருந்தினர் மாளிகையாக இருந்தாலும் இடிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும், நெடுஞ்சாலை ஆணையம், ரயில்வே ஆகியவற்றின் வளர்ச்சித் திட்டங்கள் அவசியம் என்றாலும் அவை இயற்கை வளங்களையும், நீர் வளங்களையும் பாதிக்காமல் இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Last Updated : Jul 1, 2021, 9:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details