நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் தேதி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அதிகாரம் எல்லாம் மத்திய அரசிடம் தான் உள்ளது என்றும், மாநில அரசுக்கும், முதலமைச்சருக்கும் அதிகாரம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.
இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டதையடுத்து, சீமான் மீது தமிழ்நாடு அரசு சார்பில், சென்னை மாநகர குற்றவியல் அரசு வழக்கறிஞர் அவதூறு வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் சீமான் வழக்குத் தொடர்ந்தார்.
அதில், முதலமைச்சரை பற்றி தனிப்பட்ட முறையில் நான் விமர்சனம் செய்யவில்லை என்றும், பொது வாழ்வில் அவரது பணி தொடர்பான நடவடிக்கைகளைத் தான் விமர்சனம் செய்ததாகவும், எனவே தனக்கு எதிராக உள்நோக்கத்துடன் இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.