தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தீபாவளிக் கொண்டாட்டம்: குழந்தைகளை வெளியில் அழைத்து வரவேண்டாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தீபாவளியையொட்டி, பொதுமக்கள் குழந்தைகளை வெளியில் அழைத்து வரவேண்டாம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கரோனோ விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு
தி.நகரசென்னை, ரங்கநாதன் தெருவில்

By

Published : Nov 2, 2021, 12:24 PM IST

சென்னை:தீபாவளி பண்டிகைக்குப் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்கச் செல்லும் பொதுமக்கள் குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தி.நகர் ரங்கநாதன் தெருவில் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களுக்கு கரோனோ விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் நேற்று (நவ.1) தொடங்கி வைத்தார். கரோனோ விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தா.வேலு மற்றும் ஆர்.கே மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

கரோனோ பாதுகாப்பு விதிமுறைகள்

அமைச்சர் மா. சுப்பிரமணியன் பொதுமக்களுக்கு கரோனோ பாதுகாப்பு விதிமுறைகள் பற்றி ஒலிபெருக்கி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதனைத் தொடர்ந்து, ரங்கநாதன் தெரு மற்றும் உஸ்மான் தெரு வீதியில் உள்ள அனைத்து கடைகளுக்கும் நேரடியாகச் சென்று கரோனோ பாதுகாப்பு விதிமுறைகள் அடங்கிய துண்டுப் பிரசுரத்தை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்கள் நல்வாழ்வுத்துறை , சென்னை மாநகராட்சி, காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. சென்னை மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் நவ. 3 ஆம் தேதி நள்ளிரவு 12மணி வரை பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறும்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தி.நகர் மாறிவிடக்கூடாது

துர்கா பூஜை முடிந்த பின்னர் அசாம், மேற்கு வங்கத்தில் கரோனா அதிகரித்தது. ஓணம் பண்டிகைக்கு பிறகு கேரளாவில் கரோனோ அதிகரித்துள்ளது. கரோனா ஃபேக்டரியாக தி.நகர் மாறிவிடக்கூடாது என்றார்.

ஓணத்தைப் போல், துர்கா பூஜையைப் போல் ஆகி விடக்கூடாது. பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். ரங்கநாதன் தெருவில் உள்ள சிறிய சிறிய தின்பண்டக் கடைகள் கரோனோ பரவ காரணமாக அமைகிறது.

எனவே, இன்று முதல் தீபாவளி முடியும் வரை அந்த கடைகள் மூடப்படும். இதற்காக வியாபாரிகள் எங்களை மன்னிக்க வேண்டும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்கச் செல்லும் பொதுமக்கள் குழந்தைகளை அழைத்து வர வேண்டாம். இறுதியாக ரங்கநாதன் தெருவில், நாளை முதல் கரோனா பரிசோதனை மையமும், தடுப்பூசி மையமும் செயல்படும் என்றார்.

இதையும் படிங்க: ரூ.200 மதிப்பிலான சொத்தை ரூ.25 கோடிக்கு ஏலம் விட்டு மோசடி - முன்னாள் எஸ்பிஐ தலைவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details