தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயப்பயிற்சி மாணவர்களுக்கான தேர்வு கடந்த 21ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அரசு தேர்வுத்துறையின் வழிகாட்டுதலின்படி இத்தேர்வு நேரடியாக நடத்தப்படுகிறது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக சென்னை கல்லூரி சாலையில் உள்ள லேடி வெல்லிங்டன் பள்ளி முன்பு, தொடக்கக்கல்வி பட்டயப்பயிற்சி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அரசு தேர்வுகள்துறை இயக்குநரை நேற்று சந்தித்த அவர்கள், தங்களின் கோரிக்கையை எடுத்துக்கூறினர்.
இந்நிலையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அலுவலகம் முன்பாக மாணவிகள் இன்று மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.