தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கும் - சபாநாயகர் அப்பாவு

மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Debate on grant requests will begin on April 6th said TN Speaker Appavu
Debate on grant requests will begin on April 6th said TN Speaker Appavu

By

Published : Mar 25, 2022, 3:44 PM IST

சென்னை: தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சபாநாயகர் அப்பாவு சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 'மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும், எந்தெந்த தேதிகளில் எந்தெந்த துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து முடிவு செய்ய வரும் 30ஆம் தேதி காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் கூடி முடிவு செய்யும்’ எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பட்ஜெட் விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர், பதிலுரையில் அமைச்சர்கள் பதிலளியுங்கள் எனக் கூறினார். அதேபோல் அவர், 'நிதி அமைச்சர் வெளியில் என்னிடம் தெரிவித்து தான் சென்றார். அதிமுகவினர் வெளிநடப்பு செய்திருக்கத் தேவை இல்லை. தன்னைப் புகழ்ந்து பேசுவதையும் எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதையும் முதலமைச்சர் அனுமதிப்பதில்லை.
தலைமைச் செயலகத்தை, ஓமந்தூரார் தோட்டத்திற்கு மாற்றுவது குறித்து தீர ஆராய்ந்து முதலமைச்சர் முடிவெடுப்பார்’ எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து அவர், 'ஆளுநர் முதலமைச்சரிடம் விரைந்து நீட் மசோதாவை, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்த தகவலை ஊடகங்கள் வாயிலாகவே தெரிந்து கொண்டேன்' என்றார்.

ABOUT THE AUTHOR

...view details