சென்னையிலிருந்து லண்டனில் உள்ள ஹியாத்ரோ விமான நிலையத்திற்குச்செல்லும் பிரிட்டிஷ் ஏா்வேஸ் விமானம் பாரிஸ், ஸ்காட்லாந்து, ரோம், வாஷிங்டன், நியூயார்க், சிகாகோ, சான்பிரான்சிஸ்கோ உள்ளிட்டப் பல்வேறு நகர்களுக்குச்செல்லும் பயணிகளுக்கு இணைப்பு விமானமாக செயல்பட்டு வருகிறது.
எனவே, பயணிகள் கூட்டம் அதிகரித்ததால் இந்த விமானத்தை கூடுதலாக இயக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன. பயணிகளின் கோரிக்கைகளை ஏற்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வாரத்தில் ஏழு நாட்களும் விமான சேவை செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள ஹியாத்ரோ விமான நிலையத்திலிருந்து புறப்படும் இந்த விமானம் அதிகாலை 3:30 மணிக்கு சென்னை பன்னாட்டு விமான நிலையத்தை வந்து சேரும். சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து அதிகாலை 5:31 மணிக்கு லண்டனிற்குப் புறப்பட்டுச்செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தின் பயண நேரம் சுமார் 13 மணி நேரம் ஆகும். இந்த அறிவிப்பு பயணிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. லண்டனுக்கு வாரத்தில் ஏழு நாட்களும் விமானங்கள் சென்னையிலிருந்து இயக்கப்படுவதால் சென்னைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் பெருமளவு அதிகரிக்கும் என்று சென்னை விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்தனர்.
3 ஆண்டுகளுக்குப் பின் லண்டன் - சென்னை விமான சேவை தொடக்கம் இதையும் படிங்க:வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்