தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

"மருத்துவப்படிப்பு கட் ஆப் மதிப்பெண்கள் குறையும்" - அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு

மருத்துவப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கட் ஆப் மதிப்பெண்கள் நடப்பாண்டில் குறையும் என்று கல்வி ஆலோசகர் அஸ்வின் தெரிவித்தார்.

"மருத்துவப்படிப்பு  கட் ஆப் மதிப்பெண்கள் குறையும்"
Etv Bharat"மருத்துவப்படிப்பு கட் ஆப் மதிப்பெண்கள் குறையும்"

By

Published : Sep 9, 2022, 12:43 PM IST

Updated : Sep 9, 2022, 1:38 PM IST

சென்னை: இதுகுறித்து கல்வி ஆலோசகர் அஸ்வின் கூறுகையில், ‘தமிழ்நாட்டில் நீட் தேர்வு தேர்ச்சி விகிதம் மிகவும் குறைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு போட்டித்தேர்வுகளில் மாணவர்களின் மதிப்பெண்கள் கணிசமான குறைந்துள்ளது. குறிப்பாக நீட், ஜெஇஇ உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளில் ஆண்டு தோறும் குறைவான மதிப்பெண்களையே மாணவர்கள் பெற்று வருகின்றனர்.

குறிப்பிட்ட பாடப்பகுதியை மட்டுமே படித்துவிட்டு தேர்வு எழுதுவதால் மதிப்பெண்கள் குறைவாக கிடைத்துவிடுகிறது. அதைபோலவே இந்தாண்டு நீட் தேர்விலும் குறைந்த மதிப்பெண்களை மாணவர்கள் பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ள காரணத்தால் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு 4 முதல் 7 மதிப்பெண்களும், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட் ஆப் மதிப்பெண்கள் 5 முதல் 10 வரையும் குறைய வாய்ப்புகள் உள்ளன எனத் தெரிவித்தார்.

"மருத்துவப்படிப்பு கட் ஆப் மதிப்பெண்கள் குறையும்"

நீட் தேர்வு அடிப்படையில் கடந்தாண்டு பொதுப் பிரிவினர்களுக்கான தகுதி மதிப்பெண் 138 ஆக இருந்தது. இந்த ஆண்டு 117 ஆக குறைந்துள்ளது. இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான தகுதி மதிப்பெண் 108ஆக இருந்தது இந்த ஆண்டு 93 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நீட் தேர்வில் தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் சரிவு

Last Updated : Sep 9, 2022, 1:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details