கரோனா தொற்று பரவத் தொடங்கிய காலத்திலிருந்தே பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. என்னதான் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தாலும், மாணவர்கள் இதனால் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். இச்சூழ்நிலையை கருத்தில் கொண்டு மாணவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் பாடங்கள் குறைக்கப்பட்டன.
1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 50 விழுக்காடும், 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 35 விழுக்காடும் பாடத்திட்டம் குறைக்கப்பட்டது. செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்த நிலையில், பள்ளிகள் வகுப்புகளைத் தொடங்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.