சென்னை:கடலூர் மாவட்டம், நாவலூர் கிராமத்தில் 7 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. அந்த கிராமத்திற்கு நீர் வாழ்வாதாரமாக இருந்த அந்த ஏரி, கடந்த சில ஆண்டுகளாக முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குடியிருப்பு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்த ஆக்கிரமிப்பை அகற்றி ஏரியைத் தூர்வார வேண்டும் என்றும்; கடந்தாண்டு மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும், அந்த மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.