சென்னை: வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், '2020-21ஆம் ஆண்டு ராபி பருவத்தில் காப்பீடு செய்யப்பட்ட நவரை நெல், கோடை நெல், உளுந்து, பச்சைப்பயிறு, நிலக்கடலை, எள், பருத்தி, மக்காச்சோளம், சோளம், சிவப்பு மிளகாய் போன்ற பயிர்களில், மகசூல் இழப்பினால் பாதிப்படைந்த, தகுதி வாய்ந்த ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 947 விவசாயிகளுக்கு, கடந்த 10 நாட்களில் மட்டும், 183 கோடியே 13 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதில் கடலூர், ஈரோடு, நாமக்கல், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சிவகங்கை, விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களில், நவரை நெல், கோடை நெல், உளுந்து, பச்சைப்பயிறு, நிலக்கடலை, எள், பருத்தி, மக்காச்சோளம், சோளம் மற்றும் சிவப்பு மிளகாய் பயிர்களுக்கும்- கரூர், திருப்பூர், அரியலூர் திண்டுக்கல், காஞ்சிபுரம், தூத்துக்குடி, செங்கல்பட்டு, மதுரை, தேனி மாவட்டங்களில் உளுந்து பயிருக்கும் இழப்பீடுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.