தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நீட் தேர்வில் புகைப்படத்தை மாற்றினால் குற்றவியல் நடவடிக்கை.! - நீட் தேர்வு குளறுபடிகள்

சென்னை: நீட் தேர்வில் முறைகேடுகளை தடுக்க விண்ணப்பிக்கும் போது, வேறு ஒருவரின் புகைப்படம் ஒட்டினால் கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய தகுதித் தேர்வு முகமை அறிவித்துள்ளது.

Criminal action if you change the photo on the Need Exam
Criminal action if you change the photo on the Need Exam

By

Published : Dec 4, 2019, 12:21 PM IST

கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் நடைபெற்ற ஆள்மாறாட்ட முறைகேடு விவகாரம் பெரும் சர்ச்சையினை ஏற்ப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து முறைகேடுகளில் தொடர்புடைய பெற்றோர்கள்,மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நீட் தேர்வுகளில் முறைகேடுகளை தடுப்பதற்காக புதிய விதிமுறைகளை தேசிய தகுதித்தேர்வு முகமை அறிமுகப்படுத்தியுள்ளது. நீட்தேர்வு மையங்கள் மற்றும் தேர்வு எழுதக்கூடிய அறைகளில் வீடியோ கேமராக்கள் பொருத்தப்படும். தேர்வெழுதும் மாணவர்கள் வீடியோவில் பதிவு செய்யப்படுவார்கள்.

கடந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்வு மையத்தில் மாணவர்களின் இடதுகை பெருவிரல்ரேகை பதிவு செய்யப்பட்டது இம்முறை அந்த நடைமுறை மாற்றப்பட்டு விண்ணப்பிக்கும் போதே மாணவர்கள் தங்களுடைய இடதுகை பெருவிரல்ரேகையை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீட் தேர்விற்கு விண்ணப்பிக்கும் போது வேறு ஒருவரின் புகைப்படம் ஒட்டி இருந்தது கண்டறியப்பட்டால் அவர்கள்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். நீட்தேர்விற்கு விண்ணப்பிக்கும்போது மாணவர்களின் 12 ம் வகுப்பு பதிவெண் பதிவேற்றம் செய்ய வேண்டும். மாணவர்கள் நீட் தேர்விற்கு கடந்த 2 ந் தேதி முதல் ஜனவரி 1 ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் மாணவர்களின் விண்ணப்பித்தில் திருத்தங்களை ஜனவரி 15 ந் தேதி முதல் 31 ந் தேதி வரையில் மேற்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் 12ம் வகுப்பு பதிவெண்கள் தேர்வு வாரியங்கள் அளிப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டால் மீண்டும் அதனை பதிவேற்றம் செய்யவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
முறைகேடுகளை தடுக்க புதிய வழிமுறையாக போஸ்ட் கார்ட் அளவு உள்ள புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் போது பதிவேற்றும் பாஸ்போர்ட் அளவு மற்றும் போஸ்ட் கார்ட்டு அளவு புகைப்படத்தின் மீது மாணவரின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்ட நாள் ஆகியவை இடம்பெறக்கூடிய வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் அதன்படி 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், ஜிப்மர், எய்ம்ஸ், தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், ஆகியவற்றுக்கான இளநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வினை இந்த ஆண்டு முதல் இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாநில அரசுகள் கலந்தாய்வினை நடத்திக் கொள்ளலாம்.
நீட் தேர்வுக்குப்பின் வெளியிடப்படும் விடைக்குறிப்புகளில் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி முற்றிலும் தவறு என்பது உறுதியானால் குறிப்பிட்ட கேள்விக்கான விடை எழுதாதவர்கள் உள்பட அனைவருக்கும் கேள்விக்கான முழு மதிப்பெண்ணான 4 மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீட்தேர்வு அடிப்படையிலேயே ஆயுர்வேதா படிப்பிலும் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
மேலும் மாணவர்கள் தேர்வின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், ஆடை கட்டுப்பாடுகள், நகைகள் அணிவது உள்ளிட்டவைகள் குறித்தும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: தந்தை, மகன் ஆஜர்.!

ABOUT THE AUTHOR

...view details