கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் வருகிற மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரசைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
குடிசை மாற்று வாரியம், வீட்டு வசதி வாரியம் உள்ளிட்ட அனைத்துக் குடியிருப்புப் பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில், 20ஆம் தேதிக்குப் பிறகு கட்டுமான நிறுவனங்கள் உள்ளிட்ட சில நிறுவனங்கள், தங்கள் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. இதனையடுத்து தலைமைச் செயலகத்தில் இன்று, கிரெடாய் அமைப்பின் தமிழகத் தலைவர் ஸ்ரீதரன், பாதம் தூஹர், ஹபீப் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான நிறுவனங்களின் நிர்வாகிகள் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
தமிழ்நாட்டில் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி? - ஓபிஎஸ் உடன் கிரெடாய் நிர்வாகிகள் ஆலோசனை! அப்போது கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் இந்தச் சூழலில், கட்டுமானப் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வீட்டு வசதி வாரியச் செயலாளர் ராஜேஷ் லக்கானி, சிஎம்டிஏ செயலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு முதலமைச்சருக்கும் விஜயபாஸ்கருக்கும் பனிப்போரா?