உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் இன்று சென்னையில் காலமானார். இது குறித்து இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
“திரைப்பட இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். நவீன தமிழ் சினிமாவின் துவக்கப் புள்ளிகளில் ஒருவரான இயக்குநர் மகேந்திரன், வசனங்களின் வழியே கதை சொல்லும் பாணியை மாற்றி காட்சிகளின் வழியே கதை சொல்லும் பாணியை உருவாக்கியவர்.