மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில் தெரிவித்திருப்பதாவது:
தமிழ்நாட்டில் மேலும் 3,645 பேருக்கு கரோனா பாதிப்பு! - கரோனா பாதிப்பு நிலவரம்
சென்னை: தமிழ்நாட்டில் மேலும் புதிதாக மூன்றாயிரத்து 645 பேருக்கு கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 80 ஆயிரத்து 253 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் மூன்றாயிரத்து 612 நபர்களுக்கும், கத்தாரிலிருந்து வந்த ஒருவருக்கும், மேற்கு வங்கத்திலிருந்து வந்த 19 நபர்களுக்கும், ஆந்திரப் பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்த தலா 5 நபர்களுக்கும், மத்தியப் பிரதேசத்திலிருந்து வந்த இரண்டு நபர்களுக்கும், உத்தரப் பிரதேசத்திலிருந்து வந்த ஒருவருக்கும் என மூன்றாயிரத்து 645 நபர்களுக்கு கரோனா தீநுண்மி தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 97 லட்சத்து 65 ஆயிரத்து 851 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டிலிருந்த ஒன்பது லட்சத்து ஏழாயிரத்து 124 நபர்களுக்கு கரோனா தீநுண்மி தொற்று கண்டறியப்பட்டது. மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 25 ஆயிரத்து 598 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் குணமடைந்த மேலும் ஆயிரத்து 809 பேர் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்து 68 ஆயிரத்து 722 என உயர்ந்துள்ளது.
தனியார் மருத்துவமனையில் ஆறு நோயாளிகளும், அரசு மருத்துமனையில் ஒன்பது நோயாளிகளும் என மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 804 என உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
சென்னை | 2,56,359 | தி.மலை | 19,883 | ஈரோடு | 15,575 |
கோயம்புத்தூர் | 60,821 | திருப்பூர் | 19,860 | நாமக்கல் | 12,286 |
செங்கல்பட்டு | 58,266 | கன்னியாகுமரி | 17,758 | திருவாரூர் | 12,419 |
திருவள்ளூர் | 47,087 | தேனி | 17,397 | திண்டுக்கல் | 12,126 |
சேலம் | 33,864 | விருதுநகர் | 16,980 | புதுக்கோட்டை | 12,005 |
காஞ்சிபுரம் | 31,234 | தூத்துக்குடி | 16,678 | கள்ளக்குறிச்சி | 11,026 |
கடலூர் | 26,077 | ராணிப்பேட்டை | 16,623 | நாகப்பட்டினம் | 9,562 |
மதுரை | 22,290 | திருநெல்வேலி | 16,436 | தென்காசி | 8,843 |
வேலூர் | 21,772 | திருச்சி | 16,347 | நீலகிரி | 8,791 |
தஞ்சாவூர் | 20,494 | விழுப்புரம் | 15,668 | கிருஷ்ணகிரி | 8,720 |
திருப்பத்தூர் | 7,914 |
சிவகங்கை | 7,126 |
தர்மபுரி | 6,864 |
ராமநாதபுரம் | 6,634 |
கரூர் | 5,735 |
அரியலூர் | 4,855 |
பெரம்பலூர் | 2,323 |
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் | 980 |
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் | 1,058 |
ரயில் மூலம் வந்தவர்கள் | 428 |