பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கடந்த 5ஆம் தேதி, கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
கரோனாவிலிருந்து மீண்டார் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் - SPB Bala subramaniyam Corona positive negative
16:33 September 07
எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கரோனா நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளார் என அவரது மகன் எஸ்.பி. சரண் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில், அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும், திங்கள்கிழமை(07.09.2020) அவரது உடல்நிலை குறித்து நல்ல தகவல் வெளியாகும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று(07.09.2020) காணொலி பதிவொன்றை வெளியிட்டுள்ள எஸ்.பி. சரண், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த பிரபல பிண்ணனி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் குணமடைந்துள்ளார் எனவும்; அவருக்கு பொருத்தப்பட்டிருந்த வென்டிலேட்டர் அகற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுவரை 16 மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஆறு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.