தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நுழைவு வரியில் விலக்கு அளிக்கக்கோரிய வழக்கு: இருவருக்கு பிடிவாரண்ட்

நுழைவு வரியில் இருந்து விலக்கு அளிக்கக்கோரிய இருவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நுழைவு வரியில் விலக்கு அளிக்கக்கோரிய வழக்கு
நுழைவு வரியில் விலக்கு அளிக்கக்கோரிய வழக்கு

By

Published : Sep 1, 2021, 7:47 PM IST

சென்னையைச் சேர்ந்த கிராந்தி கன்ஸ்ட்ரக்சன், ஸ்ரீ முருகன் எர்த் மூவர்ஸ் ஆகிய இரண்டு தனியார் நிறுவனங்களின் கட்டடங்களை இடிப்பது, இடர்பாடுகளை அகற்றுவதற்குப் பயன்படுத்தும் வாகனங்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தனர்.

இறக்குமதி செய்யப்பட்ட இந்த வாகனங்களுக்கு நுழைவு வரி வசூலிக்கத் தடைகோரி, 2008ஆம் ஆண்டு தனியார் நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்களின் கருத்தைக் கேட்டு தெரிவிப்பதாக மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், நுழைவு வரி செலுத்தக்கூடிய நிலையில், தற்போது இல்லை எனத் தெரிவிக்கபட்டது.

இதையடுத்து, கிராந்தி கன்ஸ்ட்ரக்சன், ஸ்ரீ முருகன் எர்த் மூவர்ஸ் ஆகிய இரண்டு தனியார் நிறுவனங்களின் இயக்குநர்களையும் செப்டம்பர் 6ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் வகையில் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

இந்த பிடிவாரண்ட் உத்தரவை சென்னை மாநகர காவல் ஆணையருக்கு அனுப்பி, அதனை அமல்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள பதிவுத் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: 'குடிசை மாற்று வாரியம் இனி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் - முதலமைச்சர் அறிவிப்பு'

ABOUT THE AUTHOR

...view details