சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட குடிசைப் பகுதிகளில் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மக்களுக்கு முகக் கவசம் மற்றும் கரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி இன்று முதல் தொடங்கியது. நொச்சிக்குப்பத்தில் இன்று இப்பணிகளை கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராதாகிருஷ்ணன், “சென்னையில் கரோனாவால் இறப்போர் விகிதம் 0.7% ஆக உள்ளது. ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் போன்ற இடங்களில் நோய்த் தொற்று குறைந்து வருகிறது. கோயம்பேட்டில் தொற்றை ஓரளவு கட்டுப்படுத்திவிட்டோம். இருப்பினும், கோயம்பேடு சந்தையுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடித்து சோதனை செய்து வருகிறோம். கரோனா அதிகமுள்ள ராயபுரம், திரு.வி.க.நகர், வளசரவாக்கம் போன்ற பகுதிகளில் நோய் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.