இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் சார்பில் நாட்டின் பல்வேறு நகரங்களில் மிதிவண்டி திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த இந்தியா சைக்கிள் 4 சேஞ்ச் சேலஞ்ச் என்ற சவாலை அறிவித்து பொதுமக்களின் கருத்துகள், அனுபவத்தை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சவாலில் இந்தியா முழுவதும் 95 நகரங்கள் பங்கேற்றுள்ளன. சென்னை மாநகரில் உள்ள பொதுமக்கள் இந்திய சைக்கிள் செயின் சேலஞ்ச் சவாலில் பங்கேற்க https://smartnet.niua.org/indiacyclechallenge/content/support-your-city என்ற இணைப்பைப் பயன்படுத்தி அதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்குப் பதிலளித்து பங்கு பெறலாம்.
இந்தச் சவாலில் சமூக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் பங்குபெற்று தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.