தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சமூக வலைதளங்களில் பரவும் செய்தி தவறானது - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னை: அனைத்து நிறுவனங்களின் பொருள்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் கடைகளை திறக்க அனுமதி இல்லை என சமூக வலைதளத்தில் பரவி வரும் செய்தி தவறானது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Corporation Commissioner Prakash
Corporation Commissioner Prakash

By

Published : Jul 26, 2020, 7:07 PM IST

கரோனா வைரஸ் காரணமாக மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. ஜூலை மாதம் சிறிய தளர்வுடன் ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழ்நாடு அரசு மீண்டும் அறிவித்தது. அந்த அறிவிப்பில் வணிக வளாகங்கள், மல்டி பிராண்ட் ஷோ ரூம்கள் போன்றவைக்கு திறக்க அனுமதி இல்லை. மற்ற கடைகளுக்கு விதிமுறைகளுடன் திறக்கலாம் என தெரிவித்திருந்தது.

சென்னையில் கிட்டத்தட்ட 20 கடைகள் (சரவணா ஸ்டோர்ஸ், ஜெயச்சந்திரன்) மட்டுமே அனைத்து நிறுவனங்களின் பொருள்கள் கிடைக்கும். இதுபோன்ற கடைகளுக்கு மாநகராட்சி முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும், உள்ளே வருவதற்கு முன் கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் போன்று பல்வேறு விதிமுறைகளுடன் அனுமதி அளித்து அந்தந்த நிறுவனங்களின் தலைமை அலுவலர்களுக்கு ஏற்கனவே அறிக்கை அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் அனைத்து வணிக நிறுவனங்களின் பொருள்கள் கிடைக்கும் கடைகளை திறக்க அனுமதி இல்லை என சமூக வலைதளத்தில் பரவிவந்த செய்தி தவறானது என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், " பெரிய வடிவிலான மல்டி பிராண்ட் ஷோரூம்கள், வணிக வளாகங்கள் மட்டுமே திறக்க அனுமதி கிடையாது. அது ஏற்கனவே தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் இருக்கிறது. அனைத்து நிறுவனங்களின் பொருட்கள் கிடைக்கும் ( சரவணா ஸ்டோர், ஜெயச்சந்திரன்) கடைகளை திறக்க அனுமதி கிடையாது என சிலர் சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகின்றனர் இது ஒரு தவறான செய்தி" என குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details