இது தொடர்பாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
தமிழ்நாட்டில் மேலும் 105 பேருக்கு கரோனா தொற்று - தமிழ்நாட்டில் மேலும் 105 பேருக்கு கரோனா தொற்று
சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 105 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது. இதன்மூலம், தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,477ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 538 பயணிகள் விமான நிலையங்களில் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். அதில், ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 936 பேர் நேற்று (ஏப்ரல் 18) வரை வீட்டில் 28 நாட்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறையின் தொடர் கண்காணிப்பில் இருந்தனர். அவர்களில் 28 நாட்கள் தொடர் கண்காணிப்பை 85 ஆயிரத்து 253 பேர் இன்று முடித்துள்ளனர். தற்போது ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 193 பேர் 28 நாட்கள் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர்.
தொற்று அதிகளவில் பரவியுள்ள நாடுகளிலிருந்து வந்த 20 பயணிகள், விமான நிலையங்களின் அருகில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு அரசு கண்காணிப்பில் உள்ளனர். மேலும், விமான நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனையின் தனி வார்டில் ஆயிரத்து 987 பயணிகள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.
40 ஆயிரத்து 879 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு பெறப்பட்டன. இவர்களில் 1,477 பேருக்கு நோய் தொற்று உறுதி இருப்பது செய்யப்பட்டுள்ளது. 31 ஆயிரத்து 853 பேருக்கு நோய் தொற்று இல்லை என்பது உறுதியாகிள்ளது. 2 ஆயிரத்து 411 பேரின் ரத்தம், சளி ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 5,135 பேருக்கு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மேலும் 105 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 411 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் நேற்று வரை 1372 பேரும், இன்று 105 பேருக்கும் என மொத்தம் 1,477 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலன் அளிக்காமல் 15 பேர் உயிரிழந்தனர். தீவிர செயற்கை சுவாசம் அளிப்பதற்கான 3,371 வென்டிலேட்டர், 29,074 படுக்கைகளுடன் கூடிய தனி வார்டுகள் தயார் நிலையில் உள்ளன.
இன்று நடத்தப்பட்ட ரத்த பரிசோதனை முடிவுகளில் சென்னை மாவட்டத்தில் 50 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் மூன்று பேருக்கும், கடலூர் மாவட்டத்தில் ஆறு பேருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் 5 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருவருக்கும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் மூன்று பேருக்கும், தென்காசி மாவட்டத்தில் நான்கு பேருக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 10 பேருக்கும், திருவாரூர் மாவட்டத்தில் 5 பேருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் ஏழு பேருக்கும், திருநெல்வேலி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் தலா இரண்டு பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கரோனா தொற்று உறுதியாகியுள்ள 34 மாவட்டங்களின் நிலவரம்: