தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

புதுச்சேரியில் மேலும் 507 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி - புதுச்சேரி அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 507 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுச்சேரியில் 507 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி
புதுச்சேரியில் 507 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி

By

Published : Jun 10, 2021, 2:23 PM IST

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 366 நபர்கள், காரைக்காலில் 98 நபர்கள், மாஹேவில் 20 நபர்கள், ஏனாமில் 23 நபர்கள் என மொத்தம் 507 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் கரோனா தொற்றால் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 657 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6 ஆயிரத்து 705 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மொத்தம் 1 லட்சத்து 2 ஆயிரத்து 893 பேர் குணமடைந்துள்ளனர். மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 255ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : புதுச்சேரியில் ஒரே நாளில் ரூ. 7 கோடிக்கு மது விற்பனை

ABOUT THE AUTHOR

...view details