தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தண்டையார்பேட்டை மருத்துவமனை முதல்கட்ட கரோனா தடுப்பூசி பணி தொடக்கம் - Corona Vaccine

சென்னை: தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் முதல்கட்டமாக கரோனா தடுப்பூசி பணி தொடங்கப்பட்டது.

முதல் கட்ட கரோனா தடுப்பூசி
முதல் கட்ட கரோனா தடுப்பூசி

By

Published : Mar 1, 2021, 7:51 PM IST

சென்னை மாநகராட்சி சார்பில் கரோனா காரணமாக பாதிக்கப்படும் முதியோர்களுக்கு முதல்கட்டமாக தடுப்பூசி போடும் பணி இன்று (மார்ச் 1) தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கிவைத்தார்.

இன்று முதல்கட்டமாக சென்னையில் 107 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. இதில் அரசு மருத்துவமனைகளில் 16 இடங்களிலுள்ள மாநகராட்சி மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளில் 75 இடங்களிலும் போடப்படுகிறது.

ஒவ்வொரு மருத்துவமனையிலும் 100 முதல் 150 முதியோருக்கு தடுப்பூசி போடப்படும். 45 வயதுமுதல் 59 வயதுவரை உள்ளவர்களுக்கும், 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும் போடப்படுகிறது.

இன்று (மார்ச் 1) தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் முதியோர்கள், தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் என மொத்தம் 100 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details