நரேந்திர மோடியின் 71ஆவது பிறந்தநாள் இன்று (செப்டம்பர் 17) நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரதமரின் பிறந்த நாளில் தடுப்பூசி செலுத்தலில் புதிய மைல்கல்லை எட்ட திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி சேவா சமர்பன் அபியான் எனப் பெயரிடப்பட்ட சிறப்பு முகாம் இன்று நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இந்தச் சிறப்பு தடுப்பூசி முகாமானது இன்றுமுதல் வருகின்ற அக்டோபர் 7ஆம் தேதிவரை செயல்படுத்தப்படவுள்ளது.
2 கோடி பேருக்கு தடுப்பூசி
தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கிய முதல் 6 மணி நேரத்திலேயே, சுமார் ஒரு கோடி பேருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இந்த எண்ணிக்கையின் காரணமாக, இந்தியாவின் தினசரி கோவிட் தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கை நான்காவது முறையாக 10 மில்லியனைக் கடந்தது.
இந்நிலையில் ஒன்றிய சுகாதாரத் துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், இன்று நாடு முழுவதும் இரண்டு கோடி பேருக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒவ்வொருவருக்கும் 1 கிலோ மீன்கள் இலவசம் - மோடி பிறந்த நாள் ஸ்பெஷல்!