தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னையில் மூன்றாவது நாளாக கரோனா தடுப்பூசி முகாம் ரத்து!

சென்னையில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக மூன்றாவது நாளான இன்று (ஜூலை 7) கரோனா தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் மூன்றாவது நாளாக கரோனா தடுப்பூசி முகாம் ரத்து
சென்னையில் மூன்றாவது நாளாக கரோனா தடுப்பூசி முகாம் ரத்து

By

Published : Jul 7, 2021, 10:25 AM IST

சென்னையில் கரோனா தொற்றை குறைப்பதற்காக மாநகராட்சி, பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் தனி கவனத்தை செலுத்தி வருகிறது. சென்னையில் மொத்தம் 45 கரோனா தடுப்பூசி மையம், 19 நகர்ப்புற சமூக சுகாதார மையங்களில் மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தடுப்பூசி முகாம் ரத்து

சென்னையில் ஜூலை 5ஆம் தேதிவரை 26 லட்சத்து,58 ஆயிரத்து,675 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி முகாம், இன்றும் (ஜூலை 7) ரத்து செய்யப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்தது. இதனால் பல இடங்களில் தடுப்பூசி இல்லை என்ற பலகை வைக்கப்பட்டது.

சென்னையில் மூன்றாவது நாளாக கரோனா தடுப்பூசி முகாம் ரத்து

ஆர்வத்துடன் மக்கள் தடுப்பூசி செலுத்துவதற்கு முன்வரும் நேரத்தில், இதுபோன்ற தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக முகாமிற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். ஜூலை 5ஆம் தேதிமுதல் ஜூலை 7ஆம் தேதிவரை தொடர்ந்து மூன்று நாள்கள் தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'மதுரையில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஒழிக்கப்படும்!'

ABOUT THE AUTHOR

...view details