சென்னை:கரோனா தொற்று கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. இதனைக்கட்டுப்படுத்தும் முயற்சியில் சென்னை மாநகராட்சியும், சுகாதாரத்துறையும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை தனியார் மருத்துவமனை சென்னை மாநகராட்சி இடம் தருவதில்லை எனப்புகார் எழுந்துள்ளது.
இதனால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படுவதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தனியார் மருத்துவமனைகளில் கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருபவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட விவரத்தை சென்னை மாநகராட்சிக்கு அனுப்ப வேண்டும் என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.