சென்னையில் அண்ணாநகர், கோடம்பாக்கம், அடையாறு போன்ற மண்டலங்களில் கரோனா தொற்று தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்தப் பரவலை குறைப்பதற்காக அப்பகுதிகளில் அதிக அளவிலான மருத்துவ முகாம்களை ஏற்படுத்தி, மாநகராட்சி தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது.
சென்னையில் அண்ணா நகர், கோடம்பாக்கம் மண்டலத்தில் கரோனா பாதிப்பு 20 ஆயிரத்தையும், தேனாம்பேட்டையில் 17 ஆயிரத்தையும் கடந்துள்ளது. சென்னையில் நாள்தோறும் ஆயிரம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
அதில், அதிக அளவாக 50 முதல் 59 வயதுடையோர் 18.74 விழுக்காட்டினரும், 30-39 வயதுடையோர் 18.69 விழுக்காட்டினரும், 40-49 வயதுடையோர் 17.63 விழுக்காட்டினரும் தொற்றுக்கு ஆளாகி வருவதாக சென்னை மாநகராட்சி புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் மட்டும் இதுவரை ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 573 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு 68 லட்சத்து 633 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள 13 ஆயிரத்து 454 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மூன்றாயிரத்து 452 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்டல வாரியாக பாதிக்கப்பட்டோரின் பட்டியல் பின்வருமாறு:
அண்ணா நகர் - 204,72
கோடம்பாக்கம் - 20,423
தேனாம்பேட்டை - 17,676
ராயபுரம் - 17,043
தண்டையார்பேட்டை - 14,798