சென்னை: தலைநகரில் கரோனா தொற்றுப் பரவல் விகிதம் குறைந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கரோனா தொற்றின் இரண்டாம் அலையின் பரவல் மிக தீவிரமாக உள்ள நிலையில், சென்னையில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. தொற்று பாதிப்பவர்களின் விகிதம் 5.35 ஆக குறைந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அண்ணா நகர், கோடம்பாக்கம், போன்ற சில மண்டலங்களில் மட்டும் தொற்றுப் பரவல் சற்று அதிகமாக உள்ளதாக தெரிகிறது. அவற்றை குறைக்க மருத்துவ முகாம்களும், விழிப்புணர்வு நிகழ்வுகளும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடத்தப்படுகின்றன.
சென்னையில் நேற்று மட்டும் 29 ஆயிரத்து 531 நபர்களுக்கு, கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 6 ஆயிரத்து 247 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கரோனா பரவல் 21.2 விகிதம் அக குறைந்துள்ளது.
100 நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்து அதில் கரோனா உறுதிசெய்யப்படுவோர் எண்ணிக்கையை கரோனா பரவல் விகிதம் என்று அழைக்கப்படும். அதன்படி சென்னையில் மே 10 தேதி 26.55% ஆக இருந்தது. இது படிப்படியாக குறைந்து தற்போது 21.2% ஆக குறைந்துள்ளது.
இதுவரை மொத்தம் 4 லட்சத்து 38 ஆயிரத்து 391 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 3 லட்சத்து 85 ஆயிரத்து 297 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள 47 ஆயிரத்து 330 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் 5, 764 பேர் உயிரிழந்தனர்.சென்னை மாநகராட்சி மண்டல வாரியாக சிகிச்சைபெற்று வருபவர்களில் விவரங்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில்,
அண்ணா நகர் -4730 பேர்
கோடம்பாக்கம் - 4395 பேர்
தேனாம்பேட்டை - 3892 பேர்
ராயபுரம் - 2531 பேர்
அடையாறு - 4510 பேர்
திரு.வி.க. நகர் - 3990 பேர்
தண்டையார்பேட்டை - 3303 பேர்
அம்பத்தூர் - 4446 பேர்
வளசரவாக்கம் - 3401 பேர்
ஆலந்தூர் - 2433 பேர்
பெருங்குடி - 2574 பேர்
மாதவரம் - 2415 பேர்
திருவொற்றியூர் - 1786 பேர்
சோழிங்கநல்லூர் - 1490 பேர்
மணலி - 1016 பேர்
இதையும் படிங்க:3 லட்சத்துக்கும் கீழ் குறைந்த தினசரி கரோனா பாதிப்பு