சென்னை:பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் மே 12ஆம் தேதி வெளியிட்டுள்ள தகவலில், ’தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 15 ஆயிரத்து 912 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்து 41 நபர்களுக்கும் டெல்லியில் இருந்து வந்த ஒருவருக்கும் என 42 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை: மேலும் தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கான பரிசோதனை இதுவரை 6 கோடியே 51 லட்சத்து 79 ஆயிரத்து 45 நபர்களுக்கு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 34 லட்சத்து 54 ஆயிரத்து 512 பேர் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 438 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாட்டில் மேலும் புதியதாக 42 பேருக்கு கரோனா பாதிப்பு! - பொது சுகாதாரத் துறை இயக்குனரகம் தகவல்
டெல்லியில் இருந்து வந்த ஒருவர் உட்பட தமிழ்நாட்டில் மேலும் 42 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 43 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 16 ஆயிரத்து 49 என உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாகப் பாதிப்பு: மேலும் சென்னையில் 24 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 5 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 2 நபர்களுக்கும், காஞ்சிபுரத்தில் 2 நபர்களுக்கும், திருவள்ளூரில் 4 நபர்களுக்கும், கன்னியாகுமரி, நீலகிரி, சேலம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு நபர்களுக்கும், விமானம் மூலம் சென்னை வந்த ஒருவர் உட்பட 42 நபர்களுக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் 223 நபர்களும், செங்கல்பட்டில் 114 நபர்களும், கோயம்புத்தூரில் 19 நபர்களும், காஞ்சிபுரத்தில் 14 நபர்களும், திருவள்ளூரில் 17 நபர்களும் என அதிக அளவில் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க:ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப்-க்கு தடை; கவலை வேண்டாம்: விசிக இலவசமாக வழங்க முடிவு