தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

NEET Coaching Centerஇல் படித்த 34 பேருக்குக் கரோனா

NEET Coaching Center: சென்னை சைதாப்பேட்டையிலுள்ள அரசு நீட் பயிற்சி மையத்தில் படித்துவரும் 34 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

neet coaching center in chennai  corona infection for students  corona infection for students in same neet coaching center  students in chennai affected by corona  corona infection  corona virus  neet coaching center  கரோனா பாதிப்பு  மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு  சென்னையில் மாணவர்களுக்கு கரோனா தொற்று  நீட் மையத்தில் மாணவர்களுக்கு கரோனா  பயிற்ச்சி மையத்தில் மாணவர்களுக்கு கரோனா
கரோனா பாதிப்பு

By

Published : Dec 31, 2021, 9:09 PM IST

சென்னை:NEET Coaching Center:தமிழ்நாட்டில் கல்வியில் பின்தங்கிய 12 மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்குப் பள்ளிகளில் தனியாக தங்க வைக்கப்பட்டு நீட் மற்றும் ஜேஇஇ நுழைவுத்தேர்வுக்கான பயிற்சிகள், ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதில் சுமார் 78 மாணவர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் பயிற்சி மையத்தில் தங்கிப்படித்த மாணவர் ஒருவருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதனைத்தொடர்ந்து பயிற்சி மையத்தில் படித்த 78 மாணவர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மாணவர்களுக்குக் கரோனா

அதில் 34 மாணவர்களுக்குக் கரோனா தொற்று இருப்பது இன்று(டிசம்பர் 31) கண்டறியப்படுள்ளது. இதையடுத்து தொற்றுப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி சுகாதார மருத்துவ மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொற்றுப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் லேசான அறிகுறிகளுடன் நலமாக இருப்பதாக மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரே இடத்தில் இருந்தவர்களுக்கு கரோனா தொற்று அதிக அளவில் கண்டறியப்பட்டுள்ளதால், சமூகப் பரவலாக மாறியுள்ளதா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புதுக்கோட்டையில் பெட்டி பெட்டியாக அம்மா கிரைண்டர்

ABOUT THE AUTHOR

...view details