இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் நடிகை ஷெரின்.
இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். இவர் 2002ஆம் ஆண்டு 'தர்ஷன்' என்ற படம் மூலம் அறிமுகமானார். அப்போது இவருக்கு வயது 16.
கரோனா உறுதி
இவர் கன்னட மொழிகளில் துருவா, பூபதி, ஷிங்களி,ஏ.கே. 56 போன்ற படங்களில் நடித்தார். தமிழில் துள்ளுவதோ இளமை, ஜெயா, விசில், பீமா, நண்பேன்டா உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கில் ஜூனியர்ஸ், டேஞ்ஜர் படங்களிலும், மலையாளத்தில் மூனாமத்தூர் என்னும் படத்திலும் நடித்துள்ளார்.
பல்வேறு படங்களில் நடித்த ஷெரின், அண்மையில் தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அசல் போட்டியாளர்களில் ஒருவராகப் பங்கேற்று பிரபலமானார்.
அதனைத் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில் நடிகை ஷெரின், தனக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போது லேசான பாதிப்பு இருப்பதாகவும், விரைவில் குணமடைந்து விடுவேன் எனவும் ஷெரின் தெரிவித்துள்ளார்.
இவர் இரண்டு முறை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு டோஸ் செலுத்தியும் ஷெரினுக்கு கரோனா தொற்று பாதித்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'ரசிகருக்கு நன்றி சொன்ன அருண் விஜய்'