தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோவிட்-19 தொற்று: கரோனாவுக்காக சிகிச்சை பெற்ற தாய்... சுகமாக பிறந்த பெண் குழந்தை! - corona infected 42 years old woman gave birth to baby girl

கரோனா தொற்று ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதாக பரவும் என்பதால் கர்ப்பிணிகள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கி வந்தனர். இச்சூழலில் பிரசவத்திற்காக வரும் கர்ப்பிணி பெண்கள் சிலருக்கு கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டபோதும், குழந்தைகள் எவ்வித தொற்றும் இல்லாமல் மருத்துவர்கள் கவனமாக இந்த புவிக்கு அழைத்து வருகின்றனர்.

42 years old woman gave birth to baby girl
42 years old woman gave birth to baby girl

By

Published : Apr 24, 2020, 8:53 PM IST

சென்னை: கரோனா நோய்க் கிருமித் தொற்று பாதித்த பெண்ணுக்கு, அரசு மருத்துவமனையில் தனது ஆறாவது குழந்தையாக, சுகப் பிரசவத்தில் நோய்தொற்று இல்லாமல் பெண் குழந்தை பிறந்துள்ளது.

கரோனா தொற்று ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதாகப் பரவும் என்பதால் கர்ப்பிணிகள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கி வந்தனர். ஆனாலும் நோய் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியாததால் அவர்களுக்கு நோய் இல்லை என குடும்பத்தில் உள்ளவர்கள் பழகி வருகின்றனர். இதனால் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் தற்போது நோய் பரவி வருகிறது.

மதுரையில் வித்தியாசமாக சேவை செய்யும் 'பேக்கரி'

சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த ஒருவர் டெல்லியில் நடைபெற்ற சமய மாநாட்டிற்கு சென்று திரும்பி வந்துள்ளார். சமய மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்கள் தாங்களாக முன்வந்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அரசு வேண்டுகோள் விடுத்தது. அதனை ஏற்று பரிசோதனை செய்து அவருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது மார்ச் 30ஆம் தேதி கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.

கணவருக்கு தொற்று இருப்பதால் அவரின் மனைவி, குழந்தைகளை சென்னை மாநகராட்சி அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது 42 வயதான 9 மாத கர்ப்பிணியாக இருந்த அவரின் மனைவிக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 3ஆம் தேதி அவரும் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அம்மா பரிசுப் பெட்டகம் பெறும் பெண்

கோவிட்-19 தொற்று ஏற்பட்ட கணவன், மனைவி, இரண்டு குழந்தைகளுக்கும் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கர்ப்பிணி பெண்ணுக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் அவருக்கு புரதச் சத்து மிக்க உணவு, இரும்பு சத்து மாத்திரைகள், உடன் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், அவர் ஏப்ரல் 16ஆம் தேதி பிரசவத்திற்காக அரசு ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

ஏப்ரல் 21ஆம் தேதி காலை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு, மாலை 6:30 மணிக்கு சுகப்பிரசவத்தில் மூலம் இரண்டு கிலோ 800 கிராம் எடையுடன் கூடிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு கோவிட்-19 பரிசோதனை செய்ததில், தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. தாயும் குழந்தையும் தற்போது நலமாக உள்ளனர்.

தாயும் சேயும் நலம்

தமிழ்நாட்டில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட தாய்க்கு சுகப்பிரசவம் மேற்கொள்ளப்பட்டது இதுவே முதல் முறையாகும். பூரண குணமடைந்த தாயையும், அவர் பெற்றெடுத்த சேய்யையும் இன்று ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் இருந்து ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி, ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனை கண்காணிப்பாளர் கலைவாணி உள்ளிட்ட மருத்துவர்கள் கைதட்டி அம்மா பரிசு பெட்டகம் அளித்து வழியனுப்பி வைத்தனர்.

ஜனநாயகத்தின் 4ஆவது தூணை முடக்காதீர்கள்! கமல்ஹாசன் வேண்டுகோள்

வீட்டிற்கு செல்லும் முன்னர் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசிய 42 வயது பெண், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட தனக்கு, மருத்துவர்களும், செவிலியர்களும் நன்றாக சிகிச்சை அளித்தனர். மேலும் இந்த நோய்யினால் பாதிக்கப்பட்டால் காசு பணம் இருந்தாலும் உறவினர்கள் அருகில் வர முடியாது. ஆனால் இவர்கள் தங்களை அன்புடன் பார்த்துக்கொண்டது, மனவருத்தம் இல்லாமல் இருக்க உதவியாக இருந்தது எனத் தெரிவித்தார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details