இது தொடர்பாக சென்னையில் ஈடிவி பாரத்துக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர் கூறுகையில்,
"டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட ஆயிரத்து 500 பேரில் 1131 பேர் தமிழ்நாடு திரும்பியுள்ளனர். அவர்களில் இதுவரை 515 நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் தாங்களாக முன்வந்து டெல்லி சென்று வந்த தகவலை தெரிவிக்க வேண்டும்.
கண்டறிந்த 515 பேரில் 50 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று கண்டறியப்பட்டவர்களில், 22 பேர் திருநெல்வேலி, ஒருவர் தூத்துக்குடி, 4 பேர் கன்னியாகுமரி, 18 பேர் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர்.
ஏற்கனவே இன்று காலை ஏழு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இன்று மட்டும் தமிழகத்தில் மொத்தம் 57 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இதுவரை 124 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். தமிழ்நாட்டில் 17 கண்டறியும் மையங்கள் தயார் நிலையில் உள்ளன. இதுவரை 124 பேர் உறுதியான நிலையில், இவர்களில் 80 பேர் டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவர்கள்", என்றார். இதையும் படிங்க: கரோனா: ஓய்வுபெறும் அரசு ஊழியர்களின் பணி காலம் நீட்டிப்பு?
Conclusion: