தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 18, 2021, 9:33 PM IST

ETV Bharat / city

தமிழ்நாட்டில் இன்று 10, 723 பேருக்கு கரோனா!

தமிழ்நாட்டில் இன்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று 10723 பேருக்கு கரோனா
தமிழ்நாட்டில் இன்று 10723 பேருக்கு கரோனா

மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (ஏப்.18) வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில், "தமிழ்நாட்டில் முதல் முறையாக ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 255 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 10 ஆயிரத்து 694 நபர்களுக்கும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்த 29 நபர்களுக்கும் என 10 ஆயிரத்து 723 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.

தமிழ்நாட்டில் இதுவரை 2 கோடியே 8 லட்சத்து 47 ஆயிரத்து 315 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 9 லட்சத்து 91 ஆயிரத்து 451 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதை கண்டறிய முடிந்தது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 10 ஆயிரத்து 391 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 5,925 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 7 ஆயிரத்து 947 என உயர்ந்துள்ளது.

மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில், சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் 21 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 21 நோயாளிகளும் என 42 பேர் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 13,113 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 3304 நபர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 954 நபர்களுக்கும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 727 நபர்களுக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 332 நபர்களுக்கும் என பெரும்பாலான மாவட்டங்களிலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தை கடந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

  • சென்னை 2,83,436
  • கோயம்புத்தூர் 67394
  • செங்கல்பட்டு 66440
  • திருவள்ளூர் 51024
  • சேலம் 35919
  • காஞ்சிபுரம் 33544
  • கடலூர் 27624
  • மதுரை 24560
  • வேலூர் 23190
  • தஞ்சாவூர் 22261
  • திருவண்ணாமலை 20944
  • திருப்பூர் 22217
  • கன்னியாகுமரி 18923
  • திருச்சிராப்பள்ளி 18884
  • தூத்துக்குடி 18520
  • திருநெல்வேலி 18381
  • தேனி 17953
  • விருதுநகர் 17740
  • ராணிப்பேட்டை 17752
  • விழுப்புரம் 16473
  • ஈரோடு 16922
  • நாமக்கல் 13217
  • திருவாரூர் 13601
  • திண்டுக்கல் 13247
  • புதுக்கோட்டை 12532
  • கள்ளக்குறிச்சி 11435
  • நாகப்பட்டினம் 11153
  • தென்காசி 9634
  • நீலகிரி 9203
  • கிருஷ்ணகிரி 10247
  • திருப்பத்தூர் 8457
  • சிவகங்கை 7680
  • தருமபுரி 7663
  • ராமநாதபுரம் 7038
  • கரூர் 6251
  • அரியலூர் 5103
  • பெரம்பலூர் 2398
  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 997
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1066
  • ரயில் மூலம் வந்தவர்கள் 428
  • தமிழ்நாட்டில் இன்று மேலும் 42 பேர் இறந்துள்ளனர். அவர்களில் 5 பேருக்கு எந்தவித இணை நோய்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • இதையும் படிங்க: தமிழ்நாட்டில் நாளை மறுநாள் அமலுக்கு வரும் இரவு நேர ஊரடங்கு

ABOUT THE AUTHOR

...view details