தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா தொற்று - வீடு திரும்பிய துணை ஆணையருக்கு கைத்தட்டி வரவேற்பு!

சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பியக் காவல் துணை ஆணையருக்குக் கைத்தட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

By

Published : May 6, 2020, 10:36 PM IST

சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த காவல் துணை ஆணையர் வீடு திரும்பினார். கடந்த 2 ஆம் தேதி நடந்த பரிசோதனையில் துணை ஆணையருக்குக் கரோனா உறுதியாகி இருந்தது. இன்று மீண்டும் பரிசோதனை நடத்திய போது, துணை ஆணையருக்கு தொற்று இல்லை என்று தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கரோனா வைரஸ் தொற்று இல்லை என்று உறுதியானதால் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் இருந்து காவல் அதிகாரி வீடு திரும்பினார். துணை ஆணையர், அவர் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் நுழைந்ததும், அங்குள்ளவர்கள் கைத்தட்டி அவரை வரவேற்றனர்.

corona affected police deputy commissioner

ABOUT THE AUTHOR

...view details