தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திருச்சி - நாகை இடையே வேளாண் பெருந்தடம் அமைக்கும் பணி தொடக்கம் - அமைச்சர் அறிவிப்பு

திருச்சி - நாகை இடையே வேளாண் பெருந்தடம் அமைக்கும் பணி தொடங்கப்படவுள்ளதாக அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்
அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

By

Published : Oct 25, 2021, 8:00 PM IST

திருச்சி, நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை உள்ளடக்கிய வேளாண் பெருந்தடம் அமைக்கப்படும் என வேளாண் துறை பட்ஜெட்டில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.

இந்த திட்டத்திற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “இந்த திட்டம் திருச்சி முதல் நாகை மாவட்ட பகுதிகளை உள்ளடக்கி செயல்படுத்தப்பட இருக்கிறது. இதில் தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நீர்வழிப்பாதைகள் உள்ளடக்கி திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் மூலம் விவசாய பொருள்களைப் பயன்படுத்தி மதிப்பு கூட்டு பொருள்களை உற்பத்தி செய்து வேளாண் பெருமக்களின் வாழ்வாதரத்தை உயர்த்துவதேயாகும். விவசாய சங்கங்கள், வணிக பெருமக்களுடன் கலந்து ஆலோசித்து திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது,

வணிக நிறுவனங்களில் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் முதலமைச்சர் இந்த திட்டத்தினை தொடங்கி வைக்கவுள்ளார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சொத்துக்குவிப்பு வழக்கு - எம்.ஆர் விஜயபாஸ்கர் விசாரணைக்கு ஆஜர்

ABOUT THE AUTHOR

...view details