தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விஷத்தை அமிர்தம் போல் மக்களிடம் விதைக்கிறது பாஜக - குஷ்பூ - பாஜக

சென்னை: நாட்டில் நடப்பதையும் பாஜக தலைவர்கள் பேசுவதையும் பார்த்தால் அமைதிப்பூங்காவான இந்தியா என்னவாகுமோ என்கிற பயம் வருகிறது என, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பூ கூறியுள்ளார்.

kushboo
kushboo

By

Published : Feb 26, 2020, 4:25 PM IST

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு, “ குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக மக்களுக்கு சரியான புரிதல் இல்லை என்று பா.ஜ.க. கூறுகிறது. ஆனால், மக்களை அழைத்துப் பேச மத்திய அரசு மறுக்கிறது.

என்ஆர்சி பற்றி பேசவே இல்லை என்று பிரதமர் கூறுகிறார். ஆனால், நாடு முழுவதும் என்ஆர்சி கொண்டு வரப்படும் என உள்துறை அமைச்சர் பேசுகிறார். இருவரில் யார் பொய் பேசுகின்றனர் என்று தெரியவில்லை. நாடு முழுவதும் மத ரீதியாக மக்களை அச்சுறுத்தும் வகையில் பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கும் குஷ்பூ.

ஜாமியா பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்தியவர்கள், மதப்பிரிவினை பேசிய பா.ஜ.க. தலைவர்கள் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை. காவல்துறையை தன் வேலைக்காக பாஜக பயன்படுத்துகிறது. நாடு எந்த திசையில் போகிறது, இனி எந்த திசையில் போக உள்ளது என்பதை நினைக்கும் போது பயமாக உள்ளது.

மக்கள் மத்தியில் அமிர்தம் போல் விஷத்தை விதைக்கின்றனர். அமைதிப்பூங்காவாக உள்ள இந்தியாவை வேறு திசையில் ஏன் கொண்டு செல்ல நினைக்கிறீர்கள் “ என்று கூறினார்.

இதையும் படிங்க: ’டெல்லி சகோதரர்கள் அமைதி காக்க வேண்டும்; விரைவில் அமைதி திரும்பும்’ - பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details