பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக, சென்னை சத்திய மூர்த்தி பவன் பார்டர் தோட்டம் பகுதியில், சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கும், இரண்டு சக்கர வாகனங்களுக்கும் மாலை அணிவித்து காங்கிரசார் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கும், இருசக்கர வாகனங்களுக்கும் மாலை அணிவித்து கண்டன உரையாற்றினார்.
ரூ.30-க்கு விற்க வேண்டிய பெட்ரோல் ரூ.107-க்கு விற்பனை- கே.எஸ்.அழகிரி - கே.எஸ். அழகிரி
கச்சா எண்ணெய் விலைப்படி, 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட வேண்டிய பெட்ரோலை, மத்திய பாஜக அரசு 107 ரூபாய்க்கு விற்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ்
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, "கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் 30 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டிய பெட்ரோலை, மத்திய பாஜக அரசு 107 ரூபாய்க்கு விற்கிறது என குற்றம் சாட்டினார். உக்ரைனில் போர் நடப்பதால், இந்தியாவில் விலைவாசி கூடுகிறது என்று பிரதமர் மோடி கூறுவது, சரியான வாதம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க : சாலை விதிகளை மீறிய உணவு டெலிவரி ஊழியர்கள் - ஒரேநாளில் 978 வழக்குகள்!
Last Updated : Apr 1, 2022, 9:35 AM IST