தமிழ்நாட்டில் அரசுத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்று ஓய்வூதியம் பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் ஏழு லட்சத்து 30 ஆயிரம் எனவும், நான்காண்டு காலத்திற்கு இவர்களுக்கும், இவர்களது குடும்பத்தினருக்கும் நான்கு லட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீடு பெறுகிற தகுதி உள்ளது என்றபோதும், தற்போது கரோனாவிற்கான சிகிச்சை இக்காப்பீட்டில் சேர்க்கப்படவில்லை எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் அரசுத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்று ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு, ஓய்வூதியத்திலிருந்து 350 ரூபாய் மாதந்தோறும் மருத்துவக் காப்பீட்டிற்காகப் பிடித்தம் செய்யப்படுகிறது. நான்கு ஆண்டு காலத்திற்கு இவர்களுக்கும், இவர்களது குடும்பத்தினருக்கும் நான்கு லட்ச ரூபாய் மருத்துவக் காப்பீடு பெறுகிற தகுதி உள்ளது.